தமிழ்
Surah Al-Fajr ( The Dawn ) - Aya count 30
وَالْفَجْرِ
( 1 ) விடியற் காலையின் மீது சத்தியமாக,
وَلَيَالٍ عَشْرٍ
( 2 ) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,
وَالشَّفْعِ وَالْوَتْرِ
( 3 ) இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக,
وَاللَّيْلِ إِذَا يَسْرِ
( 4 ) செல்கின்ற இரவின் மீதும், சத்தியமாக,
هَلْ فِي ذَٰلِكَ قَسَمٌ لِّذِي حِجْرٍ
( 5 ) இதில் அறிவுடையோருக்கு (போதுமான) சத்தியம் இருக்கிறதல்லவா?
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
( 6 ) உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
إِرَمَ ذَاتِ الْعِمَادِ
( 7 ) (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்,
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ
( 8 ) அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ
( 9 ) பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?)
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ
( 10 ) மேலும், பெரும் படைகளைக் கொண்ட ஃபிர்அவ்னையும் (உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?)
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ
( 11 ) அவர்களெல்லாம் நாடுகளில் வரம்பு மீறி நடந்தனர்.
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ
( 12 ) அன்றியும், அவற்றில் குழப்பத்தை அதிகப்படுத்தினர்.
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ
( 13 ) எனவே, உம்முடைய இறைவன் அவர்கள் மேல் வேதனையின் சாட்டையை எறிந்தான்.
إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ
( 14 ) நிச்சயமாக, உம்முடைய இறைவன் கண்காணித்துக் கொண்டு இருக்கிறன்றான்.
فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ
( 15 ) ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்; "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்" என்று கூறுகிறான்.
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
( 16 ) எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்" எனக் கூறுகின்றான்.
كَلَّا ۖ بَل لَّا تُكْرِمُونَ الْيَتِيمَ
( 17 ) அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
وَلَا تَحَاضُّونَ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ
( 18 ) ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَّمًّا
( 19 ) இன்னும் (பிறருடைய) அநந்தரச் சொத்துக்களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا
( 20 ) இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன் நேசிக்கின்றீர்கள்.
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا
( 21 ) அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا
( 22 ) உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது,
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ ۚ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنسَانُ وَأَنَّىٰ لَهُ الذِّكْرَىٰ
( 23 ) அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي
( 24 ) "என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!" என்று அப்போது மனிதன் கூறுவான்.
فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ
( 25 ) ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான்.
وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ
( 26 ) மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் கட்டமாட்டான்.
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
( 27 ) (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே!
ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً
( 28 ) நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக.
فَادْخُلِي فِي عِبَادِي
( 29 ) நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக.
وَادْخُلِي جَنَّتِي
( 30 ) மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்).